சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி!!
நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகை விஜயலட்சுமி "காவல்துறையில் புகார் அளித்த பிறகு நான் போலீஸ் பாதுகாப்பில் வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் தான் தங்கி இருந்தேன். அனைத்தும் சரியாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் வீரலட்சுமி கடந்த சில நாட்களாக அவர் ஒரு ரூட்டில் செல்கிறார், என்னையும் வேறு ரூட்டில் தள்ளப் பார்க்கிறார். எதுவாக இருந்தாலும் என்னை கேட்டுவிட்டு பேசும்படி ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தேன்.
வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் தங்கி இருந்த நிலையில் நேற்று இரவு என்னை அங்கிருந்து வெளியே போகச் சொன்னார்கள். இரவு நேரத்தில் தனியாக செல்வது பாதுகாப்பில்லை என்பதால் போலீஸ் தான் பேசினார்கள். காலையில் இருந்து உணவு கூட கிடைக்கவில்லை. போலீஸ்தான் வாங்கிக் கொடுத்தார்கள் . பல துன்புறுத்தலுக்கு ஆளான நான் அனைத்தையும் வெளியே சொல்ல முடியாது. இதன் காரணமாக புகாரை வாபஸ் வாங்க முடிவு செய்தேன். நான் பெங்களூர் கிளம்புகிறேன்.
அதே நேரத்தில் இந்த வழக்கை வாபஸ் பெற நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. யாரும் கட்டாயப்படுத்தவும் இல்லை. இதுவரை புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவும் கிடைக்கவில்லை. தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானிடம் இது குறித்து நான் பேசி விட்டேன். சீமான் சூப்பர். அவருக்கு தமிழ்நாட்டில் முழு பவர் உள்ளது; அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எனது தோல்வியை ஒத்துக்கொண்டு செல்கிறேன் . சீமானின் குரல்தான் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கிறது; அது ஒலித்து கொண்டே இருக்கட்டும். தற்போது புகாரை வாபஸ் பெற்றுள்ளேன். மீண்டும் இந்த புகாரை முன்னெடுக்க விரும்பவில்லை" எனக் கூறிவிட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!