மாஸ் அறிவிப்பு... டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு!

 
டிஎன்பிஎஸ்சி

 தமிழகத்தில்  நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு எழுதியவர்களுக்கு குட் நியூஸ். காலி பணியிடங்களில் கூடுதலாக 480  காலி பணியிடங்கள் இணைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.  

டிஎன்பிஎஸ்சி

கடந்த ஜூன் 9ம் தேதி நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வில் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் 108, இளநிலை உதவியாளர் 2,604, தட்டச்சர் 1705, ஸ்டெனோ டைப்பிஸ்ட் 445, பில் கலெக்டர் 66 என காலியாக உள்ள 6,244 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 6,244 காலி பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 

டிஎன்பிஎஸ்சி

அதன் பின்னர் ஜூன் 9ம் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-4 தேர்வினை எழுதிய நிலையில்,  இந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், இந்த காலி பணியிடங்களுடன், மேலும் 480 காலி பணியிடங்களும் இணைத்து காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 6,244 காலி பணியிடங்களுடன் புதிதாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை