மாஸ் வீடியோ... ஆதித்யா எல் 1 பூமி, நிலாவுடன் செல்பி !!

 
இஸ்ரோ

ஜூலை 14ம் தேதி இஸ்ரோ நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய சந்திராயன் 3ஐ ஏவியது. அதே போல் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலத்தையும் இந்தியா ஏவியுள்ளது. இந்நிலையில் ஆதித்யா எல்1 விண்கலம்   பூமியையும், நிலவையும் சேர்த்து எடுத்த புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.இந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

 ஆதித்யா- எல்1 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., -சி57 ராக்கெட் மூலம்  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  மொத்தம், 125 நாட்கள் பயணம் செய்து, பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள, 'லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்'  பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆதித்யா எல்1


இதன் சுற்றுவட்ட பாதை 2 முறை அதிகரிக்கப்பட்டு, அடுத்த சுற்றுக்கு   செப்டம்பர் 10ம் தேதி உயர்த்தப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.   தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் ஆதித்யா எல்1, பூமி மற்றும் நிலவுடன் செஃல்பி எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web