அடியாத்தி... 21 எருமை மாடுகள்... 120 ஆடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் விநோத வழிபாடு!

 
அடியாத்தி... 21 எருமை மாடுகள்... 120 ஆடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் விநோத வழிபாடு!

சிவகங்கை மாவட்டத்தில் 21 எருமைகள், 120 ஆடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் விநோத வழிபாடு நடத்தினர்.

சிவகங்கை அருகே பழமலைநகரில் 300-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் தங்களது குலத்தெய்வங்களான காளியம்மன், மீனாட்சியம்மன், மாரியம்மன், மதுரைவீரன் ஆகியவற்றுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

அடியாத்தி... 21 எருமை மாடுகள்... 120 ஆடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் விநோத வழிபாடு!

அதன்படி இந்த ஆண்டு கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதற்காக நரிக்குறவர்கள் தங்களது குடியிருப்பு பகுதியில் சாமி கும்பிடுவதற்கான ஓலைக் குடில்களை அமைத்தனர். தொடர்ந்து அங்கு வழிபாடு நடத்தி வந்தனர். இன்று அதிகாலை சாமியாடிகள் சாமியாடினர். தொடர்ந்து, அனைவரும் நோய் நொடியின்றி வாழ, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட  காளியம்மனுக்கு 21 எருமைகள் மற்றும் 120 ஆடுகளை பலியிட்டனர்.

பின்னர் எருமை ரத்தத்தை குடித்ததோடு, உடலிலும் பூசிக்கொண்டனர். இறைச்சியை காளிக்கு படையலிட்டு, பூஜை நடத்தினர். விழாவில் திருப்பத்தூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வந்திருந்தனர்.

அடியாத்தி... 21 எருமை மாடுகள்... 120 ஆடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் விநோத வழிபாடு!

அவர்களுக்கு இறைச்சியை சமைத்து அசைவ விருந்தளிக்கப்பட்டது. மீதி இறைச்சியை உறவினர்களுக்கு பங்கு பிரித்துக் கொடுத்தனர்.  தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மாலையில் பெண்களின் மது எடுப்பு ஊர்வலமும், நள்ளிரவில் எரிசோறு விடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web