நாளை உலகக்கோப்பை இறுதி போட்டியில் வான் சாகசம்... உற்சாகமாக தயாராகும் ரசிகர்கள்...!!

 
உலகக்கோப்பை

நாளை ஐசிசி உலகக்கோப்பை  இறுதிப்போட்டியும்,  நிறைவு விழாவும் நடைபெற உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் இறுதிப்போட்டிக்கு முன்னதாக  இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பைப் தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்று இதுவரை இந்தியா அசைக்க முடியாத அணியாக உள்ளது.  இந்தியா ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், 2 வது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  

இதனையடுத்து அகமதாபாத்தில் நாளை நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.  உலக கோப்பை போட்டி நிறைவடைவதையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் இந்திய விமானப் படையின் சூர்யா கிரண் அணி வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.   இதற்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது.
இந்த சாகச நிகழ்ச்சி குறித்து  குஜராத் மண்டல பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் ”  அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய விமானப்படையின் 9 விமானங்கள் அடங்கிய சூர்ய கிரண் குழு, வான் சாகச நிகழ்ச்சிக்கு நேற்று ஒத்திகை மேற்கொண்டது. இன்றும் ஒத்திகை நடைபெறும். இறுதி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு 10 நிமிடங்களுக்கு வான் சாகச நிகழ்ச்சி நடைபெறும்”  எனத் தெரிவித்துள்ளார்.  

நாளை நவம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நரேந்திர மோடி மைதானத்தில்  உலக கோப்பை இறுதிப் போட்டி  நடைபெற உள்ளது. இதனை காண உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இவர்களை உற்சாகமூட்ட கிரிக்கெட் வாரியமும் விமானப்படையும் திட்டமிட்டுள்ளன. அந்த வகையில் உலகக்கோப்பை  இறுதி போட்டி தொடங்கப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை கவரும் வகையில் விமான சாகசங்கள் நிகழ்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதற்கான ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன  

இந்தியா ஆஸ்திரேலியா


13வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.  ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அதன்படி இந்தியா  , ஆஸ்திரேலியா , தென்னாப்பிரிக்கா , நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

உலகக்கோப்பை

 இதில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் வெற்றி பெற்றுள்ளன.  தற்போது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்தியாவுடன் விளையாட ஆர்வமாக இருப்பதாக ஆஸ்திரேலியா கேப்டன் அறிவித்துள்ளார். கோப்பையுடன் நாடு திரும்ப ஆஸ்திரேலியா அதன் முழு பலத்தையும் பிரயோகிக்க உள்ளது. சொந்த நாட்டில் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. இதனால் இறுதிப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக்கிடக்கின்றனர். 

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web