ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் பாகிஸ்தான் மீது திடீர் தாக்குதல்!
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் தங்களது எல்லைப்பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று குற்றம்சாட்டி வருகிறது. தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு பாகிஸ்தானில் பல தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் அந்த நாடு குற்றஞ்சாட்டியுள்ளது.

சமீபத்தில், இந்த அமைப்பை ஒழிக்க முயற்சியாக பாகிஸ்தான் விமானப்படை காபுல் உள்ளிட்ட பகுதிகளில் விமானத் தாக்குதல் நடத்தியது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த தலிபான்கள், அதற்குப் பதிலடி அளிப்பதாக எச்சரித்திருந்தனர்.

அதன்படி, நேற்று இரவு தலிபான்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமைந்த குனர், ஹெல்மண்ட், பக்டியா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ராணுவ நிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர். சில சோதனைச்சாவடிகளை தலிபான்கள் கைப்பற்றியதாகவும், உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
