70 ஆண்டுகளுக்கு பிறகு இரு அதிபர்கள் தேர்தலில் போட்டி... அமெரிக்காவில் அனல் பறக்கும் பிரச்சாரம்!

 
பைடன் டிரம்ப்

அமெரிக்காவில்  அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் இப்போது முதலே அரசியல் நகர்வுகள் பரபரப்பாகி வருகின்றன.  நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்   குடியரசு கட்சி வேட்பாளர்கள் போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி   களமிறக்கப்பட்டனர்.  ஆனால் கட்சியில் போதிய ஆதரவு கிடைக்காத நிலையில் ஹாலே, ராமசாமி  இருவரும்  போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில், வாஷிங்டன் மாகாணத்தில் வேட்பாளர் தேர்வுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

பைடன் டிரம்ப்

இந்த தேர்தலில்  அமெரிக்காவின் முன்னாள் அதிபர்  77 வயதாகும் டிரம்ப் குடியரசு கட்சி வேட்பாளராக தேர்வாகியுள்ளார். இதற்குத் தேவையான 1,215 கட்சி பிரதிநிதிகளின் ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளது.  ஏற்கனவே  ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஜார்ஜியா மாகாண தேர்தல் மூலம், கட்சி வேட்பாளர் ஆவதற்கான 1,968 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.  

ஜோ பைடன்


இதன் மூலம் நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் – டெனால்ட் டிரம்ப் மோத உள்ளனர் என்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஜூலையில் நடக்கும் மில்வாக்கியில் நடக்கும் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.  1956 க்குப் பிறகு அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக அதிபர் தேர்தலில் இரு தலைவர்களின் மறுபோட்டி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள்  இருக்கும் நிலையில், வேட்பாளர்கள்   உறுதி செய்யப்பட்டு இருப்பதால் நீண்ட  பிரச்சார காலம்  நடக்க உள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web