பீகாரை தொடர்ந்து கர்நாடகாவிலும் அதிர்ச்சி.. லாரியுடன் ஆற்றுக்குள் விழுந்த பாலம்!
கர்நாடக மாநிலம் உத்தரகான்னட மாவட்டத்தில் உள்ள கார்வார் பகுதியில் ஆற்றின் குறுக்கே 1983ல் பாலம் கட்டப்பட்டது.இந்த பாலத்தின் வழியாக கோவா செல்லும் வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில், பாலம் பழமையானதால், கடந்த 2009ம் ஆண்டு பாலத்தை சீரமைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த பணி சாத்தியமாகவில்லை. இதனால் பாலத்தின் பாதி பகுதி மட்டுமே சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு இதே பகுதியில் இந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.

இந்நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் பழைய பாலத்தின் வழியாக லாரி ஒன்று ஆற்றைக் கடந்தபோது, திடீரென பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது. லாரியும் ஆற்றில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் அவரை பத்திரமாக மீட்டனர். அந்த பகுதியில் உள்ள புதிய பாலத்தில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கார்வார் - கோவா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் இடிந்து விழுந்த பாலத்தை காண மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் முன்னெச்சரிக்கையாக ஆற்றுப்படுகைக்கு பொதுமக்கள் வருவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த பாலம் இரவில் இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
