பீகாரை தொடர்ந்து உத்தரகாண்டிலும் அதிர்ச்சி.. பணியின் போதே 2வது முறையாக விழுந்து பாலம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாலம் ஒன்று கட்டுமான பணியின் போது இரண்டாவது முறையாக இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவுகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் வளைவுப் பாலம் ருத்ரபிரயாக் பகுதியில் கட்டப்பட்டது. 40 மீட்டர் உயரம், 110 மீட்டர் நீளத்தில் ரூ.76 கோடி செலவில் கட்டப்படுகிறது. இந்த பாலத்திற்கான டெண்டர் ஆர்சிசி இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்திற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கட்டுமான பணி நடைபெற்று வந்த பாலம் நேற்று (18.7.2024) அதிகாலை 4 மணியளவில் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக விபத்து நடந்த போது அங்கு யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் இல்லை. மேலும், பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த பாலம் இடிந்து விழுவது ஒன்றும் புதிதல்ல, முன்னதாக ஜூலை 2022 இல் இது இடிந்து விழுந்தது. விபத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த கன்ஹையா குமார், பங்கஜ் குமார் என்ற 2 தொழிலாளர்கள் பாலத்தின் அடியில் இருந்த இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டனர். பின்னர் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர். பாலம் கட்டும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டு தூண்களும் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இந்த பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா