மீண்டும் ஒரு வேங்கை வயல்... பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம்... !!

தமிழகத்தில் வேங்கை வயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிய டிஎன் ஏ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர் என முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் அருகே உள்ள திருவந்தவார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த குடிநீர்த்தொட்டியை மாணவர்களை அனைவரும் பள்ளி வளாகத்தில் உள்ள மினி குடிநீர் தொட்டியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று மதிய உணவு இடைவேளையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் உணவு அருந்தத் தயாராகியுள்ளனர். உணவு அருந்துவதற்காக எடுத்துச் சென்ற தட்டுகளைக் கழுவுவதற்காகக் குடிநீர்த் தொட்டிக்குச் சென்றுள்ளனர். குடிநீர்த் தொட்டியிலிருந்து துர்நாற்றம் அடித்தது. இது குறித்து மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அங்குச் சென்று பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உடனடியாக மாணவர்களைத் தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் காவல் ஆய்வாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து குடிநீர் தொட்டியிலிருந்த குடிநீர் முழுவதையும் வெளியேற்றினர். குடிநீர் முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த மர்மநபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!