இப்பவே கண்ணைக் கட்டுதே... சென்னையில் இந்த 3 நாட்களுக்கு மீண்டும் கனமழை...? வெதர்மேன் அதிர்ச்சி ரிப்போர்ட்... !!

 
வெதர்மேன்

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு   மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கியது. இதனால், தலைநகர் சென்னை ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர்   பகுதிகளில்  வீடுகளுக்குள் மழைநீர்   புகுந்தது. இதனால் பொதுமக்கள் உணவு இல்லாமல் கடும் அவதிப்பட்டனர்.  தன்னார்வலர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை,  மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கையால் சென்னை படிப்படியாக  இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

வெதர்மேன்

அதே நேரத்தில் ஒரு   சில இடங்களில் மட்டும் மழைநீர் வெள்ளம் வடியவில்லை. தொடர்ந்து மீட்பு மற்றும்   நிவாரண பணிகள்   நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், சென்னையில் அடுத்து எப்போது மழை பெய்யும் என்பது குறித்த தகவலை  வெதர்மேன் பிரதீப் ஜான்  வெளியிட்டுள்ளார்.

வெதர்மேன்

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில்   டிசம்பர் 19, 20, 21 தேதிகள் சுவாரஸ்யமாக மாறி உள்ளன. இந்நாட்களில்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்  நல்ல மழைக்கு  வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   டிசம்பர் 15ம் தேதிக்கு பிறகு தான் அந்நாட்களில் மழை அளவு குறித்து தெளிவாகக்கூற முடியும் என  குறிப்பிட்டுள்ளார். இத்தகவலால் சென்னை மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web