AI – DeepFake டெக்னலாஜி பயங்கரங்கள் ... மோடி கவலை... !!

 
மோடி

AI  தொழில்நுட்பம் ஜெட்  வளர்ந்து தொழில்நுப்டத்தின்   புதிய பரிணாம வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது. அதே நேரத்தில்  தொழில்நுட்பத்தால் எந்தளவு நன்மை விளைவிக்க முடியுமோ அதே அளவுக்கு அதனை தவறாக பயன்படுத்தி தீமை விளைவிக்கலாம் என சமீபத்திய தொடர் குற்ற நிகழ்வுகள் நமக்கு தெரிவிக்கின்றன. அதனை  தவறாக பயன்படுத்தினால் யார் யார் பாதிக்கப்படுவார்கள் என அறிந்து நல்வழிப்படுத்துவதே மனிதர்களின்  தலையாய கடமை.  

மோடி

இது குறித்து பிரதமர் மோடி பெரும் கவலையும் எச்சரிக்கையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  “  AI தொழில் நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்  . இதன் அடிப்படையில்   தயாராகும் தவறான வீடியோக்கள் ஆன்லைனில் பரவும் போது அதன் எச்சரிக்கைகளை வெளியிடுமாறு ChatGPT குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   AI மற்றும் Deepfake தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் செயல்கள் கவலை அளிக்கிறது. நான் நடனமாடுவது போன்ற போலி வீடியோவை நானே பார்த்தேன். தொழில்நுட்ப விஷயத்தில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஊடகங்கள் மற்றும் செயலிகள் விளக்க வேண்டும்” என பிரதமர் மோடி  இன்று நடைபெற்ற விழாவில் வலியுறுத்தினார்.

மோடி


சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து போலியாக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலானது..  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை, சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.  அதன் பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதே நூற்றுக்கும் மேற்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கியுள்ளன. இனி இந்த மாதிரி போலி வீடியோக்கள்  தயார் செய்து பதிவிடுபவர்களுக்கு   சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web