இன்று முதல் அதிமுகவில் வேட்பாளர்களுக்கு விருப்பமனு... களமாடத் தயாராகும் அரசியல் கட்சிகள்!
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதை அடுத்து தேர்தல் பிரச்சார வியூகங்கள், தொகுதி பங்கீடு, கூட்டணி கட்சிகளுக்கான பேச்சுவார்த்தை என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தலைமை கழகத்தில் இன்று முதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை மறுநாள் புதன்கிழமை பிப்ரவரி 21ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, தமிழகம் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் பிப்ரவரி 21 புதன் கிழமை முதல் 1.3.2024 - வெள்ளிக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!