பகீர் வீடியோ... காரில் யானையை துரத்திய அதிமுக பிரமுகர்... ரூ.1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை!

 
யானை


கோவை அருகே வனப்பகுதியில் அதிமுக பிரமுகர், யானையை காரில் சென்றபடியே துரத்தி செல்லும் வீடியோ வைரலானதையடுத்து, அதிமுக பிரமுகருக்கு வனத்துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, பாதுகாக்கப்பட்ட பகுதியான ஆனைமலை பகுதியில் வனவிலங்குகள் நடமாடிவருவதால், அவற்றின் பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் வாகனங்களை இயக்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடும் கட்டுப்பாடுகளை மீறியும் நள்ளிரவில் சிலர் வனப்பகுதிக்குள் வாகனத்தில் செல்கின்றனர். 



இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் மிதுன் என்பவர், தனது வாட்ஸ்-அப்பில், வனப்பகுதிக்குள் அவர் காரில் பயணிப்பதும், அவரது காருக்கு முன்னால் நின்றிருக்கும் யானையை காரில் பயணித்தப்படியே அவர் விரட்டுவதுமாக வீடியோ ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். ஹைபீம் விளக்கு வெளிச்சம் மற்றும் காரின் சப்தத்தால் யானை பீதியில் வனப்பகுதிக்குள் உள்ள சாலையில் ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து வன உயிரின ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

யானை
இது தொடர்பான விசாரணையில், புலிகள் காப்பக பகுதியான நவமலை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு அதிமுக பிரமுகர் மிதுன் சென்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மிதுனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web