இன்று குருவருள் தரும் ஐப்பசி கார்த்திகை... இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!
முருகப்பெருமான் அருளை பெறவும், விரும்பிய காரியங்கள் நிறைவேறவும் பெண்கள் வழிபடும் கார்த்திகை விரதம் மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் அனுசரிக்கப்படுகிறது. கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் முருகன் “கார்த்திகேயன்” என அழைக்கப்படுகிறார். இந்த நாளில் அவரை மனமார வணங்கினால், குழந்தைப்பேறு, வேலை, கல்வி, திருமணம் போன்ற வாழ்வின் முக்கிய காரியங்களில் சிறந்த பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
ஐப்பசி மாத கார்த்திகை விரதம் நவம்பர் 5ஆம் தேதி வருகிறது. இந்த விரதம் வியாழக்கிழமையுடன் இணைந்தால் மேலும் சிறப்பாகக் கருதப்படுகிறது. அந்த நாளில் விரதம் செய்து வழிபட்டால், முருகப்பெருமான் அருளுடன் குரு பகவானின் அருளும் பெறப்படுகிறது. ஜாதகத்தில் குரு பலம் இழந்திருந்தாலும், முருகனை வழிபடுவதால் வாழ்க்கையின் தடைகள் நீங்கி, வருமானம், கல்வி, திருமணம், குழந்தைப்பேறு போன்ற விஷயங்கள் சீராக நடக்க உதவும்.
கார்த்திகை நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானின் மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் செய்து அல்லது பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு, வீட்டில் முருகப்பெருமானின் படத்திற்கு முன் நெய் தீபம் ஏற்றி வழிபடினால், வாழ்வின் அனைத்து தடைகளும் நீங்கி, வேண்டிய வரங்கள் கிடைக்கும். இதற்கு கூடுதல் சிறப்பு, மஞ்சள் நிற ஆடை அணிந்து, முருகன் கோவிலில் சென்று வழிபடுவதே கருமம் தரும் என்று நம்பப்படுகிறது.
குருவார கார்த்திகையில் தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
குருவார கார்த்திகை நட்சத்திர நாளில் கருப்பு நிற ஆடை அணிவதைத் தவிர்க்க வேண்டும். கருப்பு நிறம் சனி பகவானுக்குரியதாக இருக்கிறது, ஆனால் இந்த நாளில் குரு பகவானின் அருளைப் பெற மஞ்சள் நிற ஆடை அணிவதே சிறந்ததாகக் கருதப்படுகிறது.
ஞானத்தை குறிக்கும் நூல்கள், காகிதம், புத்தகங்களை இந்த நாளில் எடைக்கு வைத்திட வேண்டாம். இத்தகைய செயல்கள் குருவார கார்த்திகையின் சிறப்பை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நாளில் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். வழிபாடு செய்யும்போது பலிபீடு மற்றும் மூலவருக்கிடையே நடக்க கூடாது. இதனால் விரதத்தின் சிறந்த பலனும், குரு பகவானின் அருளும் பெறப்படுவதாக கருதப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
