விமான பயணிகளே அலர்ட் ... இன்று முதல் அக்.8 வரை விமான பயண அட்டவணையில் திடீர் மாற்றம்!

 
ஜனவரி 8 முதல் மதுரை – சார்ஜா விமான சேவை தொடக்கம்!

இன்று முதல் அக்டோபர் 8ம் தேதி வரை சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளதையடுத்து விமான நிலைய அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆகையால் விமான பயணிகளே.. உங்கள் பயணத்தை ஒரு முறை செக் செய்து கொண்டு முறையாக திட்டமிட்டுக்கோங்க. கடைசி நேர பரபரப்புக்கு ஆளாகாதீங்க.

விமானம் விமான நிலையம்

இன்று முதல் இந்திய விமானப்படை தினத்தை ஒட்டி, சென்னையில் வான் சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள் நடைபெறுவதால், சென்னை விமான நிலையத்தில் அக்டோபர் 8ம் தேதி வரை விமான அட்டவணையில் மாற்றம் செய்யப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 1:45 மணி முதல் 3:15 மணி வரை சென்னை விமான நிலைய வான் தடம் மூடப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அக்டோபர் 3, 5, 6, 7 மற்றும்  8 ஆகிய தேதிகளிலும் வான் தடம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயணிகள் தங்களின் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு எந்தெந்த விமானங்களின் புறப்படும் நேரம், வருகை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொண்டு, தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமானம் விமான நிலையம்

இந்திய விமானப்படை தினத்தை ஒட்டி, வான் சாகச நிகழ்ச்சியை காண ஏராளமானோர் வருகை தருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற இருக்கும் வான் சாகச நிகழ்ச்சியைக் காண பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வான்சாகச நிகழ்ச்சிகள் அக்டோபர் 6ம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒத்திகைகள் நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web