ஏர்ஹோஸ்டஸ் கழுத்தை அறுத்துக் கொலை!! கதறித் துடித்தபெற்றோர்!!

 
ரூபால் ஒக்ரே

சத்தீஸ்கர் மாநிலத்தில் வசித்து வருபவர் ரூபால் ஓக்ரே. இவர்   ஏர் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி  விமான பணிப்பெண் ஆக பணிபுரிந்து  வருகிறார். இவர் அந்தேரி  மரோல் பகுதியில்  அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்தார்.  தினமும் குடும்பத்தினருடன் பேசும் இவர் நேற்று பேசவில்லை. அவர் போனை எடுக்கவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அருகில் வசித்து வரும் அவரது உறவினருக்கு தகவல் அளித்தனர்.   அவர் உடனடியாக வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

ரூபால் ஒக்ரே

பலமுறை தட்டியும் ரூபால் ஒக்ரே கதவை திறக்கவில்லை.  அவர் சந்தேகம் அடைந்து   போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து வந்த போலீஸார் மாற்று சாவி மூலம் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அறையில் ரூபால் ஒக்ரே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்தார்.  அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ரூபால் ஒக்ரே

அந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை  ஆய்வு செய்த போது அங்கு துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வரும்  விக்ரம் அத்வால்  தான் கடைசியாக  ரூபால் ஒக்ரே வீட்டுக்கு  வந்து சென்றுள்ளார்.   விக்ரம் அத்வாலை கைது செய்த போலீஸார்  அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.  
கடந்த சில நாட்களுக்கு முன் விக்ரம் அத்வாலுக்கும், ரூபால் ஒக்ரேக்கும் பிரச்சினை  ஏற்பட்டதாகவும்,   ஆத்திரத்தில்  விக்ரம் அத்வால் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web