தங்கமே பரவாயில்ல... தீபாவளி விடுமுறைக்கு விமான டிக்கெட் விலை எகிறியது!
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து செல்வதைத் தடுத்து நிற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து விமான டிக்கெட் விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.
சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வழக்கமாக பண்டிகை காலங்களில் விமான டிக்கெட் விலை உயர்வதாக இருந்தாலும், இவ்வீட்டும் கட்டணங்கள் மிக அதிகமாக உயர்ந்துள்ளன.
சென்னை – முக்கிய நகரங்களுக்கான விமான டிக்கெட் விலை:

சென்னை – கோவை: வழக்கமாக ரூ.3,500-3,800; இன்றைய தினம் குறைந்தபட்சம் ரூ.12,500, அதிகபட்சம் ரூ.17,158
சென்னை – மதுரை: வழக்கமாக ரூ.3,100-3,500; இன்றைய தினம் குறைந்தபட்சம் ரூ.16,000, அதிகபட்சம் ரூ.18,000
சென்னை – திருச்சி: வழக்கமாக ரூ.3,500-4,000; இன்றைய தினம் குறைந்தபட்சம் ரூ.10,300, சராசரி ரூ.15,233
சென்னை – தூத்துக்குடி: வழக்கமாக ரூ.3,500-3,800; இன்றைய தினம் ரூ.17,053

மற்ற முக்கிய நகரங்களுக்கு:
சென்னை – டெல்லி: வழக்கமாக ரூ.5,800-6,000; இன்றைய கட்டணம் ரூ.30,414
சென்னை – மும்பை: வழக்கமாக ரூ.3,300-3,400; இன்றைய கட்டணம் ரூ.21,960
சென்னை – கொல்கத்தா: வழக்கமாக ரூ.5,200-5,400; இன்றைய கட்டணம் ரூ.22,100
சென்னை – ஹைதராபாத்: வழக்கமாக ரூ.2,900-3,100; இன்றைய கட்டணம் ரூ.15,000
இந்நிலையில் பொதுமக்கள் விமான பயணத்தைத் திட்டமிடுவது கடினமாக இருக்கிறது. பண்டிகை காலங்களில் விமான கட்டணங்கள் அதிகரிப்பது வழக்கமானதல்ல, ஆனால் இந்த ஆண்டு அவ்வளவு எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
