மாஸ் வீடியோ... நடிகர் அஜீத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார், கார் ரேஸில் வெற்றி பெற்று நாட்டியத்தைத் தொடர்ந்து தற்போது துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரது பயிற்சியின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சினிமாவைத் தாண்டி தன்னுடைய ஆர்வங்களிலும் சாதனை படைத்து வருவதை அவரது ரசிகர்கள் பெருமையாகக் கூறுகின்றனர்.
#AjithKumar in complete #FocusMode at #KongunaduRifleClub 🔥#PrecisionShot 🎯 #InAction #RiflePractice #AK #AjithKumar #AK #FocusMode pic.twitter.com/2wCclpQhHI
— Suresh Chandra (@SureshChandraa) October 26, 2025
அஜித் குமார் கார் ரேஸிங், போட்டோகிராபி, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்திலும், போர்ச்சுக்கல் மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற ரேஸுகளிலும் அவரது அணி சிறப்பாக செயல்பட்டது. இதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் செயல்படும் கொங்கு நாடு ரைஃபில் கிளப்பில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் அஜித் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவை அவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அஜித் கடந்த 2022 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் 6 பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
