அஜீத் பட நடிகைக்கு இரட்டைக்குழந்தை!! குவியும் வாழ்த்துக்கள்!!

’தல’ நடிகர் அஜீத் குமாரின் தங்கையாக ஆழ்வார் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பண்டேகர் . இவர் தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றவர். இவருக்கு கடந்த ஆண்டு முருகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
ஸ்வேதா பண்டேகர், கர்ப்பமடைந்தார். அவருக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ஸ்வேதா, "ஆகஸ்ட் 30ம் தேதி மால், ஸ்வெப்னா என 2 முழு நிலவை கண்டோம்.
இரண்டும் வெவ்வேறானவை. இரண்டும் நன்றாக பிரகாசிக்கின்றன. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!