”குட்டித் தல “ கால்பந்தில் கலக்கும் அஜீத் மகன் ஆத்விக்..!!

 
ஆத்விக்

தமிழ் சினிமாவில் ”தல” யாக  வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர், சினிமா மற்றும் பைக் ரைடிங்கிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.  கடந்த ஓராண்டாக இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  உலக சுற்றுலா ஆசையில்   முதல் கட்டத்தை வெற்றிகரமாக முடிவு செய்துள்ளார். அந்த வகையில் இந்தியா, நேபாள், பூடான்  நாடுகளில் இதுவரை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள அஜித், தனது அடுத்தகட்ட பைக் சுற்றுலாவை இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்.

ஆத்விக்

தற்போது அவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாக உள்ளது. அப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் தான் தன் உலக சுற்றுலாவை தொடர அஜித் திட்டமிட்டு இருக்கிறார்.
இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இதில் ஆத்விக் கால்பந்து விளையாட்டில்   ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். தற்போது புகழ்பெற்ற சென்னையின் எஃப்.சி அணியின் யூத் டீமிற்காக   விளையாடி உள்ளார்.

ஆத்விக்


அஜித்தின் மகன் ஆத்விக் சென்னையின் எஃப்.சி Grassroot Academy-ல் சிறப்பாக விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்து  ரசிகர்கள் பலரும், ஆத்விக்கிற்கு தங்களுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web