முக அழகிரி மகன் அப்பல்லோவில் அனுமதி... முதல்வர் நேரில் நலம் விசாரிப்பு? தொண்டர்கள் அதிர்ச்சி...!!

 
துரை தயாநிதி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடன்பிறந்த  அண்ணன் முக அழகிரி. இவர்  முன்னாள் மத்திய அமைச்சர். இவருடைய மகன்   துரை தயாநிதி.இவருக்கு  திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தயாளு அம்மாளின் மூத்த மகன் மு.க.அழகிரி. இவர் திமுகவின் தென்மண்டல செயலாளராக இருந்து தொண்டாற்றியவர்.  

துரை தயாநிதி

இவரது மகன் துரை தயாநிதி, மதுரையில் தொழிலதிபராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். ‘மங்காத்தா’, ‘தமிழ்படம்’ உட்பட  பல  வெற்றிப்படங்களின் தயாரிப்பாளர் துரை தயாநிதி. இவர் சமீபகாலமாக அரசியல் மற்றும் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.  இந்நிலையில், இன்று துரை தயாநிதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துரை தயாநிதி

அவரை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவமனையில் சென்று நேரில் நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில்  இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.வரும் மக்களவைத் தேர்தலில் மதுரையில் துரை தயாநிதி திமுக வேட்பாளராகப் போட்டியிடலாம் என செய்திகள் வெளியாகின.  அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது  திமுகவினரிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web