மதுபோதையில் விபரீதம்... நண்பரைக் கல்லால் தாக்கி கொலை செய்த இளைஞர்!
குலசேகரன்பட்டினம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டரை கல்லால் தாக்கி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்தவர் முஹம்மது முஸ்தபா மகன் சாஹுல் ஹமீது. ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்தவர் கன்னிராஜ் மகன் அதிமணி @ முஹம்மது அசன் (49). இவர்கள் இருவரும் நண்பர்கள், ஒன்றாக பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இருவரும் சேர்ந்து உடன்குடி சந்தைக்கு காய்கறி வாங்க வந்துள்ளனர்.

காய்கறி வாங்கிவிட்டு செல்லும் வழியில், இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சாகுல் ஹமீது தலையில் ஹாலோ பிளாக் கல்லை போட்டு ஆதிமனி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலின் பேரில் குலசேகரன்பட்டினம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி அதிமணி @ முஹம்மது அசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
