கடைசி நேரத்துல கஷ்டப்படாதீங்க.. குறிச்சு வெச்சுக்கோங்க... ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை தினங்கள் வெளியீடு!

இந்தியா முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பும் ரிசர்வ் வங்கி மூலமாக தான் வெளியிடப்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி முந்தின மாத இறுதியில் அறிவித்து விடுகிறது.
பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உட்பட மற்ற தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்துவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் மாறுபடும். அதே போல் மாநிலத்துக்கு மாநிலம் இந்த விடுமுறை நாட்கள் வேறுபடுவது உண்டு. ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 9 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியல்:
ஆகஸ்ட் 4, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 10, 2024 - சனிக்கிழமை - 2வது சனிக்கிழமை
ஆகஸ்ட் 11, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 15, 2024 - வியாழக்கிழமை - சுதந்திர தினம்
ஆகஸ்ட் 18, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 19, 2024 - திங்கட்கிழமை - ரக்க்ஷா பந்தன்
ஆகஸ்ட் 24, 2024 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை
ஆகஸ்ட் 25, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 26, 2024 - திங்கட்கிழமை - ஜென்மாஷ்டமி
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!