அதிரடி சரவெடி... சிஎஸ்கே அணியில் 11 பேரும் தமிழக வீரர்கள்... சீமான் அட்ராசிட்டி... !

 
சீமான்

 
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளை திரட்டி வியூகம் வகுத்து வருகின்றன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி,காமராஜர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் முத்துக்குமாரின் 15வது ஆண்டு வீரவணக்கம் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.   இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.  தமிழகத்தில்  நாம் தமிழர் கட்சிக்கு கூடும் கூட்டத்தை கண்டு மற்ற கட்சிகள் கலங்கி நிற்கின்றன.  

சிஎஸ்கே

திமுகவின் கொள்கை என்பது  பணத்தை பாதுகாக்க பதவியிலேயே இரு என்பது தான் .  திமுக மாநாட்டில் காவாலா பாட்டு போட்டு தான்  கூட்டத்தை கூட்டுறாங்க,.  எங்களைப்போல் பணம் கொடுக்காமல் கூட்டம் கூட்ட முடியுமா? தொலைக்காட்சி, செய்தித்தாள் விளம்பரம் கிடையாது .   சுவரொட்டிகள் மட்டுமே இத்தனை  கூட்டத்திற்கு காரணம் .  திமுக என்படு கட்சியே அல்ல, அது ஒரு கம்பெனி. கட்சி தொடங்கியவர் அண்ணா. அவரிடம் இருந்து   கருணாநதி, அவரிடமிருந்து  மகன் ஸ்டாலின், அவரிடமிருந்து   மகன் உதயநிதி இப்படித்தான் உள்ளது. ஸ்டாலின் தனியாக கட்சி தொடங்கினால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களே சேர யோசிப்பார்கள்.

ஸ்டாலின்

அதே போல் அதிமுக என்பது எம்ஜிஆர் உருவாக்கி   ஜெயலலிதா வழி நடத்தினார்.  சசிகலா   கொடுத்த கட்சியை எடப்பாடி வைத்துக் கொண்டார்.  அதிமுக, திமுக தலைவர்கள் தமிழர்கள் கிடையாது என்றும், நாம் தமிழர் கட்சி தான் தமிழர் கட்சி. இதுவே புரட்சி.  2026க்கு பிறகு  திமுக, அதிமுக கட்சிகள்   ஒரு குச்சியாக கூட இருக்காது என்றார்.  நாம் தமிழர் கட்சி  ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடிவிட்டு பனம் பால், தென்னம்பால்  உணவின் ஒரு பகுதியாக வழங்கப்படும்.  தமிழகத்திற்கென கிரிக்கெட்டில்  சிஎஸ்கே என்ற ஒரு அணி உள்ளது. அதில் ஒருவர் கூட தமிழர் இல்லை. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் 11 பேரும் தமிழக வீரர்களாக இருப்பார்கள் “ என சீமான் கூறினார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web