அமெரிக்காவுக்கு அனைத்து வகையான அஞ்சல் முன்பதிவுகளும் நிறுத்தம்... இந்திய தபால் துறை.!

 
அமெரிக்கா
 


 
இந்திய தபால் துறை அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகளை நேற்று முதல் நிறுத்தியுள்ளது.  அமெரிக்கா  இந்தியா மீது 50% வரி விதித்ததற்கு எதிர்ப்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.  முன்பு 800 டாலர் வரை மதிப்புள்ள அஞ்சல் பொருட்களுக்கு வரி விலக்கு இருந்த நிலையில், இப்போது 100 டாலருக்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

இதனால், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருட்களின் முன்பதிவுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், 100 டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்களுக்கு வரி விலக்கு தொடர்கிறது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனடாவில் தபால் சேவை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தபால் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.


கனடிய தபால் திணைக்களத்தின் தொழிற்சங்கமான  தொடங்கிய நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால், தபால்கள் மற்றும் பொதிகள் கையாளப்படுவது அல்லது விநியோகிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.  இந்த வேலைநிறுத்தம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும், சில தபால் அலுவலகங்கள் மூடப்பட்டு இருப்பதாகவும் Canada Post அறிவித்துள்ளது.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?