கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி... ஆட்டம் போட குவிந்த சுற்றுலாப் பயணிகள்!!

 
கும்பக்கரை அருவி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில்   மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது   இயற்கை எழில் கொஞ்சும்  கும்பக்கரை அருவி.  சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் இந்த அருவிக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது.  குறிப்பாக கொடைக்கானலுக்கு வரும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், கும்பக்கரை அருவியில் நீராடி செல்கின்றனர்.  

கும்பக்கரை அருவி

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது.  

கும்பக்கரை அருவி

கடந்த 9 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால்  சுற்றுலா பயணிகள் பலரும் குளிக்க முடியாமல் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இந்நிலையில் கும்பக்கரை அருவியில் 9 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும்   சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web