ஹெட்போன் ஆர்டர் செய்தவருக்கு டூத்பேஸ்ட் டெலிவரி செய்து அமேசான் தந்த அதிர்ச்சி!

 
ஹெட்போன்

ஆன்லைன் ஷாப்பிங் முறை, விரல் நுனியில் உலகம் என்று விஞ்ஞானம் சுருக்கி விட்ட காலத்தில், பரவலாக பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமேசான் இணையதளத்தில் ரூ.20,000 மதிப்புள்ள சோனி நிறுவனத்தின் ஹெட்போன் ஆர்டர் செய்தவருக்கு கோல்கேட் பேஸ்ட் அனுப்பி அமேசான் அதிர்ச்சி அளித்தது.
அமேசானில் யஷ் ஓஜா என்பவர் ரூ.19,900 மதிப்புள்ள சோனி XB910N என்ற ஒயர்லெஸ் ஹெட்போன்களை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வந்தடைந்த பார்சலில் ஹெட்போன்களுக்கான பெட்டிகள், விளக்க குறிப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ஆனால், அவர் ஆர்டர் செய்த ஹெட்போனுக்கு பதிலாக கோல்கேட் பேஸ்ட் வைக்கப்பட்டிருந்தது.



இதனால் அதிர்ச்சியும், ஏமாற்றமுமடைந்தார் யஷ் ஓஜா. ஆர்வமுடன் பார்சலை பிரிக்கும் வீடியோவை எக்ஸ் வலைதளத்தில் அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.
இது அமேசான் தளத்தின் நிர்வாகத்தினர் கவனத்துக்கு சென்று, அவர்கள் பதிலளித்துள்ளனர்.இதுகுறித்து யஷ் ஓஜாவுக்கு அமேசான் அளித்துள்ள பதிலில், "இந்த விவகாரத்தை தீவிரமானதாக கருதுகிறோம். முன்னுரிமை வரிசையின் அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளிக்கிறோம். குறிப்பிட்டுள்ள நேரம் வரை தயவு செய்து காத்திருக்கவும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூத்பேஸ்ட்
அமேசானில் வாடிக்கையாளர்களுக்கு தவறுதலாக பொருள்கள் விநியோகிக்கும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. எக்ஸ் வலைதள பயனர், அருண்குமார் மெஹர் என்பவர், கடந்த ஜூலை 5ம் தேதி அன்று "சிக்மா 24-70 f 2.8" என்ற லென்ஸை ரூ.90 ஆயிரம் செலுத்தி ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அவருக்கு வந்த பார்சலில் தானிய விதைகள் இருந்தன. இதுகுறித்து அவரும் தனது கசப்பான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web