15% HR ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான் ... !

 
அமேசான்
 

சமீபத்தில் ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு அதிரடியாக பணி நீக்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்   அமேசான் நிறுவனம் தனது எச்ஆர் பிரிவில் பணியாற்றும் 15 சதவீத ஊழியர்களை நீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக ஏஐ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பணியாளர் திறன் அளவீடுகள் குறிப்பிடப்படுகின்றன.

அமேசான், கிளவுட் சேவைகள், ஆன்லைன் வர்த்தகம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட துறைகளில் ஏஐயை பயன்படுத்தி சேவைகளை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, எச்ஆர் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணி நீக்கம் அறிவிப்பு மின்னஞ்சல்  மூலம் வழங்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

அமேசான்

நிறுவனம் ஏற்கனவே பல பிரிவுகளில் பணி நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கியுள்ளதாகவும், புதிய திட்டங்களில் 100 பில்லியன் டாலர்களை ஏஐ திட்டங்களில் முதலீடு செய்யும் திட்டம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதனால் எச்ஆர் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்  .

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?