அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதிய ஆம்புலன்ஸ்... மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி பலியான சோகம்!
மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த தம்பதியர் ஆம்புலன்ஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சாந்தி நகர் பேருந்து நிலையம் அருகே, கே.எச் சந்திப்பில் இரவு 11 மணியளவில் பயங்கர விபத்து ஏற்பட்டது. போக்குவரத்து சிக்னலில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து பல இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் ஒரு தம்பதியினர் உயிரிழந்தனர்; மேலும் இருவர் காயமடைந்தனர். விபத்திற்குப் பிறகு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். சம்பவம் நடந்தபோது அந்த ஆம்புலன்ஸில் நோயாளி யாரும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸை தள்ளிவிட்டு கவிழ்த்தனர்.

சாட்சியர்கள் தெரிவித்ததாவது, மிகுந்த வேகத்தில் வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சிக்னலில் நின்றிருந்த இருசக்கர வாகனங்களை மோதியதோடு, அவற்றில் ஒன்றை சில மீட்டர்கள் இழுத்துச் சென்று அருகிலிருந்த சிக்னல் கம்பத்தில் மோதி நின்றது என்று கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
