நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்... சுரங்கப்பாதையின் நடுவே டயர் வெடித்து நின்ற அரசு பேருந்தால் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில்வே சுரங்க சாலையில் அரசு பேருந்து ஒன்று திடீரென நடுரோட்டில் சென்றுக் கொண்டிருந்த போது டயர் வெடித்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில்வே சுரங்க பால சாலையில் டயர் வெடித்து பழுதாகி நின்ற அரசு பஸ் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த பகுதியில் இருந்த வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இதனால், பயணிகள் மாற்று பேருந்து மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். பின், டெப்போ பணியாளர்கள் டயரை மாற்றிய பின், பேருந்து புறப்பட்டு சென்றது. பிரேக் டவுன், இயந்திர கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் அடிக்கடி அரசுப் பேருந்துகள் பாதி வழியில் நிற்பது தொடர் கதையாகிறது என்று பயணிகள் புலம்பிச் சென்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!