'Work From Home’.. மனைவியின் போன் காலை ஒட்டு கேட்டு 2 மில்லியன் டாலரை சம்பாதித்த கேடி கணவர்!

 
WFH

டைலர் லூடன் தனது மனைவியுடன் டெக்சாஸில் வசிக்கிறார். இவரது மனைவி அமெரிக்காவின் டிராவல் சென்டர் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்ததால், அது அவருக்கு தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அவர் பணியாற்றி வந்த நிறுவனம் வேறு நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான அனைத்து முடிவுகளும் அவரது மனைவியால் எடுக்கப்பட்டுள்ளன.

Work from home is boon? Man makes $2 million by listening to wife's office  calls - Hindustan Times

இந்நிலையில், இது குறித்து மனைவியின் செல்போன் அழைப்புகள் அனைத்தும் வீட்டின் பக்கத்து அறையில் இருந்து அவரது கணவர் கேட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் வெற்றியடைந்தால் அமெரிக்காவின் டிராவல் சென்டர் பங்குகள் உயரும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதற்காக தனது பென்ஷன் பணத்தையெல்லாம் விற்று அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார்.

எதிர்பார்த்தது போலவே நிறுவனத்தின் பங்குகளும் உயர்ந்தன. இதன் மூலம் 2 மில்லியன் டாலர்கள் வரை சம்பாதித்துள்ளார். மனைவிக்கு தெரியாமல் இதை செய்துள்ளார்.

News, Breaking News, Latest News, News Headlines, Live News, Today News  CNN-News18

ஒரு கட்டத்தில், தான் செய்த காரியத்தை மனைவிக்குத் தெரிவிக்க மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். மேலும் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும், அந்நாட்டு புலனாய்வு அமைப்புகள் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தான் பெற்ற பணத்தையும், இதைச் செய்ததற்கான அபராதத் தொகையையும் திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார்.  ஒர்க் ஃப்ரம் ஹோம் ஆல் நடந்த இந்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web