மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட அமெரிக்க இளைஞர்கள் ... தட்டித் தூக்கிய காவல்துறை...!!

 
இளைஞர்கள்

சென்னை நுங்கம்பாக்கத்தில்  பிரபல நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு   அமெரிக்க இளைஞர்கள் மது அருந்தியதில்  போதை தலைக்கேறியது. இதனால்  ஓட்டலில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.   இதனையடுத்து ஓட்டல் நிர்வாகம் இரண்டு இளைஞர்களையும் பவுன்சர்கள் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.   திடீரென ஜெமினி சிக்னலில் ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து சாலையில் நடந்து சென்றவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என அனைவரையும் கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கினார்.  

இளைஞர்கள்


கோபமடைந்த பொதுமக்கள் சிலர் பதிலுக்கு அந்த அமெரிக்க இளைஞரை அடித்து சாலையோரம் உட்கார வைத்தனர்.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்த அமெரிக்க இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் ஏற்றினார். ஆனால் மீண்டும்  அந்த இளைஞர் வெறிபிடித்தது போல் கூச்சலிட்டு  அங்கிருந்த காவல் ஆய்வாளர், காவலர்கள், பொதுமக்கள்  அனைவரையும் துரத்தி துரத்தி தாக்கினார். இதனைப் பார்த்த அவ்வழியாக சென்ற இளைஞர்கள் சிலர் காவலர்களின் உதவியோடு அந்த இளைஞரை மடக்கி பிடித்து கைகளை கட்டி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அவரை  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளைஞர்கள்


இச்சம்பவம் குறித்து   போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டவர்கள் இருவரும்   அமெரிக்கா கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர்கள். இவர்கள்  அலெக்ஸ் மற்றும் மெல்கார் .  இருவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்ட போது  அளவுக்கு அதிகமான மது அருந்தி  போதை தலைக்கேறி இவ்வாறு நடந்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web