மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபா மூளைக்காய்ச்சல்... 11 ஆக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை!
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் அமீபா மூளைக்காய்ச்சல் பரவி வருவதால் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த காய்ச்சல் பாதித்து கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுமி, 3 மாத குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

திருச்சூர் மாவட்டத்தில் வசித்து வரும் 59 வயது நபர் கடும் காய்ச்சல், தலைவலியுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை முடிவில், அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவர் பணிபுரிந்து வந்த ஓட்டலில், உடன் பணிபுரிந்த கோட்டயத்தில் வசித்து வரும் ஓட்டலில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து இறந்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்து உள்ளது. ஓட்டல் அருகே உள்ள கிணற்றில் இருந்து நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து 10 பேர் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மலப்புரத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் இந்த நோய் அறிகுறிகளுடன் அதே மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாான். மருத்துவ பரிசோதனை முடிவில், சிறுவனுக்கு அமீபா மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தற்போது 11 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
