அதிர்ச்சி... அம்மா உணவக சாப்பாட்டில் அரணை!!

 
அரணை

அம்மா உணவகங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. குறைந்த விலையில் உணவு, ஏழை எளிய மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்டது. உணவகங்களில் உணவு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதால்  பல நேரங்களில்  விபரீதங்கள் ஏற்பட்டு விடுகின்றன. தூத்துக்குடி மாவட்டம் ராஜீவ் நகரில் வசித்து வருபவர் சரவணன். இவர் தனியார் நிறுவனத்தி பணி புரிந்து வருகிறார்.  திடீரென ஏற்பட்ட உடல்நல குறைபாடு  காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  

அரணை

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் தனது குடும்பத்தினருக்காக  4  சாம்பார் சாதங்களை வீட்டிற்கு வாங்கிச் சென்றார்.  
 வீட்டில் தனது மனைவியுடன் சேர்ந்து சாம்பார் சாதத்தை சரவணன் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, சாதத்தில் காய்கறிகள் போல நீளமாக ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. அதனை எடுத்து பார்த்தால்  சாப்பாட்டில் அரணை (பாம்புராணி) இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.   தான் சாப்பிட்ட சாம்பார் சாதத்தில் இருந்து விஷம் பரவி விடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 


இதனையடுத்து    அம்மா உணவக அலுவலர்களிடம் தெரிவிப்பதற்காக  சாப்பாட்டில் இருந்த அரணையுடன் சாதத்தை வாங்கிய அம்மா உணவகத்திற்குச் சென்றார்.  ஆனால், அம்மா உணவகம் மூடப்பட்டு இருந்த நிலையில், செய்வதறியாமல் முதலுதவிக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றார்.   இது குறித்து சரவணன்   “காய்ச்சல் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தேன். என் குடும்பத்தினருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர்களுக்கும் சேர்த்து அரசு மருத்துவமனைக்கு அருகில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் இருந்து உணவு வாங்கிச் சென்றேன்.

அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் கருணாநிதி படம்

பின்னர், வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு கொண்டிருந்தபோதுதான், சாப்பாட்டில் அரணை இருப்பதை பார்த்தேன். இதனைக் கண்டு அச்சம் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டேன். பின்னர் இது குறித்து  அம்மா உணவக அலுவலர்களிடம் தகவல் தெரிவிப்பதற்காக  வந்து பார்த்தபோது, உணவகம் அடைக்கப்பட்டிருந்தது. இதை சாப்பிட்டு எனக்கும், என் குடும்பத்திற்கும் ஏதாவது நேர்ந்தால் யார் பொறுப்பெடுத்து கொள்வார்கள்? அஜாக்கிரதையாக செயல்பட்ட அலுவலர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web