வெயிலுக்கு உகந்த அம்மன் ஆவணி திருவிழா இன்று தொடக்கம்!!

 
கொடியேற்றம்

திருச்செந்தூர்  முருகன் கோவிலின் உபகோவில்   வெயிலுகந்த அம்மன்.இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்  ஆவணித் திருவிழா கோலாகலமாக நடத்தப்படும். அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 23 இன்று புதன்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.  இதற்காக  அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனையும், அம்மன் சன்னதிக்கு எதிராக உள்ள கொடிமரத்தில் காலை 5.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

வெயிலுக்குகந்த அம்மன்

இரவு 7 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நாட்களில்  நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர்.   விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம்  10வது நாளில் அதாவது   செப்டம்பர்  1ம்  தேதி  நடைபெற்றது.  

திருச்செந்தூர் முருகன்

இத்திருவிழாவை முன்னிட்டு சிவன் கோவிலில் இணை ஆணையரிடம்  நிர்வாக அனுமதி பெறப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் சிவன் கோவில் மணியம் நெல்லையப்பன் உட்பட கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web