இன்னும் சற்று நேரத்தில் 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் .. குடையோடு கிளம்புங்க!!

 
தமிழகத்தில் பெய்த மழை அளவு நிலவரம்- பேரிடர் மேலாண்மை தகவல்..!!

 தமிழகத்தில்  இன்னும் சற்று நேரத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் . திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம். கோவை, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும் என . சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழைபெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை  காலையில் கொளுத்தும் வெயில் மாலையில் மேகமூட்டம், நள்ளிரவில் மிதமான மழை, விடியலில் சாரல் என வானிலை ரம்மியமாக இருந்து வருகிறது.   சென்னை வானிலை ஆய்வு மையம்   வெளியிட்ட செய்திக்குறிப்பில்   தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தேனி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்   கனமழை பெய்யக்கூடும்.

மழை

அதே நேரத்தில் நாளை ஆகஸ்ட் 30ம் தேதி   தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது  முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.  

மழை

இன்றும் நாளையும்  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு  55 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும். இதனையடுத்து  மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web