பகீர்... ப்ளாட்பார்மில் ஏறி நின்ற மின்சார ரயில் ... பயணிகள் அலறி அடித்து ஓட்டம்!!

 
மின்சார ரயில்

 சமீபகாலமாக ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. ஒடிசாவில் 3 ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதி கோரவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில்  மதுரா ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர்.  மதுரா ரயில் நிலையத்தில் 2வது நடைமேடைக்கு சாகுர் பாஸ்தி – மதுரா மின்சார ரயில் நேற்று இரவு 11 மணிக்கு வந்தடைந்தது.  அதிவேகம் காரணமாக திடீரென அந்த ரயில் நடைமேடையின் மேல் ஏறி நின்றது.

ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்துகொண்டு ஓடினர். இருப்பினும் ஒருபயணி படுகாயம் அடைந்தார்.  இதையடுத்து ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் வேகமாக ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டனர். இச்சம்பவத்தை அறிந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று  பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.   ரயில் என்ஜின் தடம் புரண்டது

எப்படி என்பது பற்றி தெரியவில்லை என ரயில் எஞ்ஜின் ஓட்டுனர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.இச்சம்பவத்தால் மதுரா – டெல்லி ரயில் பாதையில் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது. மால்வா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ், பாந்தரா டேர்மினல் உட்பட பல ரயில்கள் நிறுத்தப்பட்டன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web