ஊழியரின் மகள் திருமணத்திற்கு ஓடோடி வந்த சிங்கப்பூர் முதலாளி.. தமிழர் முறைப்படி உற்சாக வரவேற்பு!

 
செந்தூர்பாண்டியன்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன். சிங்கப்பூரில் உள்ள எல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். செந்தூர்பாண்டியன் மகள் முகவிஜிக்கும் கார்த்திக்கும் இன்று முதுகுளத்தூரில் உள்ள தனியார் மாளிகையில் திருமணம் நடந்தது. சிங்கப்பூரைச் சேர்ந்த எல் கார்ப்பரேஷன் லிமிடெட் இயக்குநர் கூ லின், வணிக இயக்குநர் ஹான் மிங் மற்றும் திட்ட மேலாளர் டிம் ஆகியோர் இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு வந்திருந்த 3 பேரும் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் செண்டை மேளம் முழங்க, சீர் தட்டுகள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் திருமண மண்டபத்தில் தமிழர்கள் கலாச்சாரம் படி ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் கூ லின் தாலியை எடுத்து கொடுக்க மணமகன் தாலி கட்டினார். பின்னர் சந்தனம், குங்குமம் வைத்து வரவேற்றனர்.

பின்னர், செந்தூர் பாண்டியன் மகள் முகவிஜி தாற்காலிகமாக பணியாற்றி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்றார். அங்கு 3 பேருக்கும் பள்ளி சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தார். பின்னர், ஆரத்தி செய்யப்பட்டு, மாணவர்கள் சங்குகள் முழங்க மலர் தூவி வரவேற்றனர். பின்னர் பள்ளியின் வளர்ச்சிக்காக ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினர். தனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டது மட்டுமின்றி மணமகள் பணிபுரிந்த பள்ளிக்கும் நன்கொடை அளித்த சிங்கப்பூர் தொழிலதிபரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!'

From around the web