விரட்டி விரட்டி பொது மக்களை கடித்து குதறிய வெறிநாய்கள்.. 2 பெண்கள் உட்பட 17 பேர் படுகாயம்!

 
நாய்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் வெறிநாய் கடித்து இரண்டு பெண்கள் உட்பட17 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  அவைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், நடந்து செல்லும் பொதுமக்களையும் துரத்தி  கடித்து வருகின்றன.

Karambakudi, Pudukkottai : கறம்பக்குடி: கரம்பக்குடி : தமிழ்நாடு ஏகத்துவ  ஜமாஅத் மாநில தலைவர் வேலூர் எம் இப்ராஹிம் நடைபெற்ற பிரச்சார யாத்திரை |  Public App

இந்த நிலையில் நாய் கூட்டம் வெறியோடு கடிக்க வந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிலர் நாய்களை அங்கிருந்து விரட்ட முயன்ற போதும்,  அவர்களையும் விடாமல் கடித்து குதறியது.  இதில்17 பேர் காயமடைந்து,  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் 8 மாதத்தில் வெறிநாய் கடிக்கு 18 பேர் பலி | Tamil News 18 people  died of rabies in Tamil Nadu in 8 months due to lack of vaccination

எனவே, மாவட்ட நிர்வாகம் வெறி நாய்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தெரு நாய்களை பேரூராட்சி நிர்வாகம் கூவாகனங்களில் ஏற்றிச் சென்று வெளியூர்களில் விட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web