செம... சாகச வீடியோ.... நடுவானில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிய இந்திய விமானம்!!

 
விமானப்படை விமானம்

எகிப்தில் பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை டேங்கர் விமானம் மற்ற போர் விமானங்களுக்கு  எரிபொருள் நிரப்பி சாகசம் செய்தது. இது குறித்த வீடியோஅ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.  அதன்படி  பிரைட் ஸ்டார்-23 பயிற்சியில்  இந்திய விமானப்படை போர் விமானம் ஐஎல்78 டேங்கர்  எகிப்திய விமானப்படையின் மிக்-29 மற்றும் ரஃபேல் போர் விமானங்களுக்கு  எரிபொருள் நிரப்பியது.

போர் விமானங்களைப் பொறுத்தவரை, பயணிகள் அல்லது சரக்கு விமானங்களைப் போல அடிக்கடி  தரையிறங்கி எரிபொருள் நிரப்ப நேரம் கிடையாது. இதனால்  வானில் பறந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில்  எரிபொருள் நிரப்ப வேண்டியது அவசியம்.   அந்த வகையில், இந்திய விமானப்படையின் டேங்கர் விமானம், எகிப்தின் 2 போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிய வீடியோ  வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  எகிப்தின் கெய்ரோ விமானப்படை தளத்தில்  2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பயிற்சி நடைபெறும்.  அந்த வகையில் நடப்பாண்டில்  செப்டம்பர்  3ல் தொடங்கிய இந்தப் பயிற்சிகள்  செப்டம்பர் 16ம் தேதி முடிவடைகிறது.

விமானப்படை விமானம்


இந்த பயிற்சியில் அமெரிக்கா, சவுதி அரேபியா, கிரீஸ் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானப்படை குழுக்கள் கலந்து கொள்கின்றன.   பிரைட் ஸ்டார்-23 பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.இந்த கூட்டு பயிற்சியின் மூலம்   எல்லைகளுக்கு அப்பால் நாடுகள் மத்தியிலான உறவை மேம்படுத்த உதவுகிறது. தொடர்ந்து 60ஆண்டுகளாக எகிப்து இந்தியா உறவு தொடர்கிறது.   இரு நாடுகளும் கூட்டாக ஏரோ இன்ஜின் மற்றும் விமானங்களை உருவாக்கியதும்,  எகிப்திய விமானிகளுக்கு இந்திய விமானிகளால் பயிற்சியும் அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web