வழி தெரியாமல் கடலூர் வந்த வடமாநில மூதாட்டி... உறவினர்களுடன் சேர்த்து வைத்த நெகிழ்ச்சி!!

 
கடலூர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து ஒரு குடும்பம்  சுற்றுலா வந்த நிலையில் அதில் இருந்து ஒரு மூதாட்டி வழி தவறி கடலூர் வரை வந்துவிட்டார்.  கடலூர் சில்வர் பீச் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்   மூதாட்டி ஒருவர் சுற்றித்திரிந்தார். சில்வர் பீச் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அவரை கூப்பிட்டு விசாரணை நடத்தினார்.  மொழி பிரச்சினையால் அவரால் தகவலை சொல்ல முடியவில்லை. அந்த மூதாட்டி போஜ்புரி மொழி மட்டுமே பேசினார். ஹிந்தியும் தெரிந்திருக்கவில்லை.  

கடலூர்

போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர்.  கடலூர் முதுநகர் முதியோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில்  கடலூர் வங்கியில்  பணிபுரியும் ஊழியர் ஒருவர் போஜ்புரி மொழி தெரிந்தவராக இருந்தார்.  அவரை வைத்து அந்த மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர்.   அவர் உத்தரபிரதேசம் மாநிலம் பன்வாரி பகுதியில் வசித்து வரும்   குஷ்மரணி . வயது  74.  ராமேஸ்வரத்திற்கு சென்றுவிட்டு ரயிலில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் போது தெரியாமல்  கடலூரில் இறங்கியதும், செலவுக்கு பணம் ஏதும் இல்லாததால் கடலூரில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. 

கடலூர்
 அவரிடம் விசாரணை நடத்திய தகவலின் படி  அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உத்தரபிரதேசத்தில் இருந்து மூதாட்டியின் குடும்பத்தினர் இன்று கடலூர் வந்தனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மூதாட்டியின் பயண செலவுக்கு ரூ.3000 பண உதவி செய்தார். மூதாட்டியின் குடும்பத்தினர் அவருக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து போலீஸ் ஜீப்பில் மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் பேருந்து நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.  இச்சம்பவம் கடலூர் முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web