தலைகீழாக கவிழ்ந்த தக்காளி வேன்...6 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்!!

 
தக்காளி

ஈரோடு மாவட்டத்தில்  திம்பம் மலைப்பகுதியில் தக்காளி ஏற்றி வந்த வேன் கவிழ்ந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.திம்பம் மலைப் பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது.  தமிழகம்,  கர்நாடகா இடையே முக்கிய போக்குவரத்து பாதையாக இருந்து வரும் திம்பம் மலைப்பகுதி வழியாகத் தான்  தினமும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

போக்குவரத்து நெரிசல்
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தக்காளி ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது 8வது கொண்டை ஊசி வளைவில் வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. வேனை ஓட்டிவந்த தன்ராஜ்  சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.கொண்டை ஊசி வளைவில் வேன் விழுந்ததால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகம் ,  கர்நாடகா இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

திம்பம் மலைப்பகுதி

இதனால் வாகன ஓட்டிகள் இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு 2 மணி வரை அடர் வனத்திற்கு இடையே காத்துக்கிடந்தனர்.   இந்த விபத்து குறித்து  தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறை மற்றும் வனத்துறையினர் தக்காளியை வேறு வண்டிக்கு மாற்றம் செய்தனர். அத்துடன்  கவிழ்ந்து கிடந்த வேனை  ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.சரக்கு வேனில்  அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததால் கொண்டை ஊசி வளைவில் ஏன் நிலைதடுமாறி கவிழ்ந்தது தெரிய வந்தது. 6 மணி நேர கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web