அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி ரூ.3,000 கோடி கடன் வழங்கியது. அந்தக் கடன் சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. விசாரணையில் அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனி வழக்குப் பதிவு செய்தது. இதன் அடிப்படையில், அனில் அம்பானியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர், அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும், அவரின் நெருங்கிய உதவியாளரும், ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குநருமான அசோக் குமார் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில், அமலாக்கத்துறை பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது. இதில் மும்பையில் உள்ள 66 ஆண்டுகள் பழமையான அவரது வீடு, குழும நிறுவனங்களுக்கு சொந்தமான குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல முக்கிய சொத்துகளும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
