இன்று 3 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு!
இந்தியாவில் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மகாராஷ்டிரா சட்டபேரவையின் பதவிக்காலம் நவம்பர் 3ம் தேதியும், ஹரியானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 26 தேதியும், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை பதவிக்காலம் ஜனவரியிலும் நிறைவடைகிறது. இதனையடுத்து இந்த மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகளை தேர்தல் குழு மேற்கொண்டது. தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களுக்கு செல்லும் தேர்தல் ஆணையர்கள் குழு அந்தந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, வாக்குச்சாவடி மையங்கள் எண்ணிக்கையை இறுதி செய்வது, வாக்காளர் பட்டியல் மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது உட்பட பல முக்கிய அம்சங்கள் குறித்து மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்நிலையில் இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. இன்று மாலை 3 மணிக்கு இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புல் எந்தெந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது என குறிப்பிடப்படாததால், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது. செப்டம்பர் 30க்குள் ஜம்மு காஷ்மீர் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
