இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்... ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிரடி!!

 
போபண்ணா

19வது ஆசிய விளையாட்டு போட்டிகள்   சீனாவின் ஹாங்சோவ் நகரில்  கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து போட்டிகளும் ஹாங்சோவில் உள்ள 56 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடத்தப்பட்டு  வருகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளில் வசித்து வரும்   12,400 வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.


இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகள் 39 விளையாட்டுகளில் கலந்துகொண்டு  விளையாடி வருகின்றனர்.  ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா நேற்று துப்பாக்கிச் சுடுதல், டென்னிஸ், ஸ்குவாஷ், தடகளம் ஆகியவற்றில் பதக்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி

மற்ற சில போட்டிகளில் இறுதி, காலிறுதி மற்றும் அரையிறுதிக்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.இந்நிலையில் இன்று நடந்த டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சீனாவின்  தைபா அணியை எதிர்கொண்டனர். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், டை பிரேக்கரில் 10- 4 என்ற கணக்கில் இந்திய அணி தங்கப்பதக்கத்தைத் தட்டிப்பறித்தது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web