நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதல்.. ஓட்டுனர் கவலைக்கிடம்!!

 
லாரி விபத்து

நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் வசித்து வருபவர் நடராஜ்.  லாரி ஓட்டுநரான நடராஜ்  இன்று தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு ‌ லாரியில் உப்பு லோடு ஏற்றி சென்றார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தாப்பாத்தி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகே சென்று போது லாரி திடீரென பழுதாகி உள்ளது. 

லாரி விபத்து


அதனை இயக்க முடியாததால் வேறு வழியின்றி நடராஜ் சாலையில் லாரியை நிறுத்திவிட்டார்.  ‌ இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கரி ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற லாரி, பழுதாகி நின்ற லாரியை கவனிக்காமல் அதிவேகமாக வந்தது. லாரி மீது மோதி   கரிலோடு ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர் தூத்துக்குடி முள்ளக்காட்டினை சேர்ந்த செல்லமுத்து ராஜ் படுகாயமடைந்தார்.

ஆம்புலன்ஸ்
  
இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  விரைந்து சென்று காயமடைந்த செல்வ முத்துராஜை மீட்டனர். அவரை   எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.   அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து   காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web