நவம்பர் 6ம் தேதி த.வெ.க. தேர்தல் சின்னம் கேட்டு விண்ணப்பம்!
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க.) கரூர் நிகழ்வு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்திலிருந்து மெதுவாக மீண்டு வரும் த.வெ.க., மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்சி பணிகள் நடைபெற வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில், த.வெ.க. தனது தேர்தல் சின்னத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கத் தயாராகி வருகிறது. இதற்காக த.வெ.க. தலைவர் விஜய் நவம்பர் 6 அல்லது 11 ஆம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் சின்னத்துக்காக விசில், பேட், உலக உருண்டை உள்ளிட்ட ஐந்து சின்னங்களை கட்சி முன்பே தேர்வு செய்து வைத்துள்ளது. தேர்தல் ஆணையம் எந்தச் சின்னத்தையும் ஒதுக்கினாலும் அதனை ஏற்று தேர்தலை சந்திக்க த.வெ.க. திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து ஆவணங்களும் முறையாக தயார் செய்யப்படுகின்றன. நவம்பரில் விஜய் விண்ணப்பித்தால், வரவிருக்கும் ஜனவரி மாதத்திற்குள் சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய், இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை துவங்கவுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
