இன்று கடைசி தேதி... தேசிய திறன் போட்டிகளில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
இந்தியா சில்க்ஸ்
 

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டிகளில் பங்கேற்க இன்று செப்.30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் World Skills 2026 நடைபெறவிருப்பதைத் தொடர்ந்து, India Skills 2025 போட்டிகள் நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் இந்தியாவின் சிறந்த மாணவர்களுடன் போட்டியிட்டு, உலகத்திறன் போட்டியான World Skill Competition (Olympic of Skills)-ல் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: 
India Skills 2025 போட்டிகளில் பதிவு செய்ய விரும்பும் 16 முதல் 24 வயது வரை உள்ள மாணவர்கள் https://naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள்: 30.09.2025.

India Skills 2025 போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தொழில்துறை நிபுணர்களின் வழிகாட்டல், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும் எனவும், இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?