ஆவின் ஜங்ஷன் மூலம் ஐஸ்க்ரீம் விற்பனை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு!!

 
ஆவின்

தமிழகம் முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது ஆவின் நிறுவனம்.  கடந்த சில மாதங்களாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்பட்ட நிலையில் இதனை மீண்டும் மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வருகிறது.

ஆவின்

தமிழகம் முழுவதும்  ஆவின் நிறுவனம் தினமும்  4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பாலை  கொள்முதல் செய்கிறது. சுமார் 30 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகிறது.  அதே நேரத்தில் ஆவின் நிறுவனம் ஆவின் ஜங்ஷன் என கடைகள் மூலம் ஆவின் தயாரிப்பான ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.  தற்போது ஐஸ்கிரீம் விற்பனை செய்ய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆவின் பொதுமேலாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆவின்

அதில்  விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை விநியோகம் செய்வதற்கு மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .  விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் முழு விவரங்கள் அறிய திருவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட ஆவின் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 17ம் தேதி எனவும் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் தகவல்களுக்கு 98942 04423, 78459 59109, 96291 78789 என்ற ஆவின் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web